Skip to main content

Posts

துவாதச புண்டரம் :

துவாதச புண்டரம் : [ஶ்ரீசூர்ணம் (தாயார்) - திருமண் (பெருமாள்) - ஸ்தாநம் - நிறம்] கேசவன்  தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற  சக்கரம்  ! நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் -- வேள்வித்தீ  பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !  அன்னை சிரிதேவி யாம்! நாரணன்  சங்கு தங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்  மங்கலத் தாளினன்! தேவியும் -- பொங்கலைவாய்  தோன்றினாள்!  வா ன்நீல வண்ண த்தெம் அண்ணல்மால் ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு ! மாதவன்  கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில் பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் -- பொருந்தும்   அமலன்அங் கைமா தவன்தன் தேவி  கமலை யும் சேரிடம் மார்பு ! கோவிந்தன்  குளிர்முத்தின் வெண்ணிற மும்  கோலவில்  நான்கும்  மிளி ர்முன் கழுத்தின் அமர்ந்து -- அளிபொறை  அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !  முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து.  விஷ்ணு  தாமரைத் தாதன்ன பொன்னிற த் தோள்கள்  சுமக்கும்  கலப்பை ஓர் நான்கும் -- நமக்கு  வயிற்றின் வலப்புர ம்சேர் விட்டுவவன் மாது   துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து. மதுசூதனன்  உலக்க
Recent posts

பன்னிரு நாமப் பாட்டு.

Respond to this post by replying above this line New post on  Thiruvonum's Weblog ஸ்ரீ பன்னிரு நாமம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்- by  thiruvonum   ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி - கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம - சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான் பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வான் ஏறப் போம் அளவும் வாழ்வு  ---------------------------------------------------------------------------------- இந்த திவ்ய பிரபந்தமும் பேர் அருளாளன் விஷயமே -ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களை சொல்லி பன்னிரு திருமண் காப்புகளில் அவ்வவ் வெம்பெருமான்களை ஆவாஹனம் செய்ய வேண்டும் -இந்த பிரபந்தத்தில் அவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம் - அவர்கள் அணிந்து இருக்கும் திவ்ய ஆயுதங்கள் -அவர்கள் தலைவராய் வீற்று இருக்கும் திசை - நம் சரீரத்தில் புண்ட்ர ரூபமாய் அவர்கள் வகிக்கும் பாகம் ஆகியவற்றை ஸ்ரீ தேசிகன் வெளியிட்டு அருளுகிறார் - ---

ஆசுகவி - பகுதி 4.

முகநூல் மலர்ந்த ஆசுகவி - பகுதி 4. 451 . ஸ்ரீ பார்த்த சாரதி பிரம்மோத்ஸவம் : பிரமன் விடுதூய  தர்மாதி பீடம்  புறப்பாடு காலை முதல்நாள் -- இரவு  குழலூதும் கண்ணனுக்கு  புன்னை வாகனம்  தாழாதே காணலாம் மேவு. பரம பதநாதன் பாங்காய்த்  தோன்றி  சிரம மதுஇன்றி யாரும் -- வரமெனக்  கண்டு களிப்ப  அனந்தன்பால்  வந்தவன்காண்  மீண்டரி வாகனம்  தோன்று. புதுவருடம் ''பொற்றடை'' அஃதின்  தடைதீர்  யதுகுல பாலன்  கலுழன்  -- அதன்மேல்  போந்தான் விடியல்; இரவிலோ  அன்ன த்தை  சொந்தமாய் ஊர்ந்தான் உவந்து. வங்கத் தலைகடல் வாவென் அழைப்ப,வான்  தங்கத் தகடன்ன பாலொளி -- எங்கும்  பரப்பும் சிறப்புடை  சூரிய சந்திரர்   சேர வலம்வரும்நாள் நாலு. இறைவியின் ஏற்றம் தமதாக பார்த்தற்  கிறையவன்  அன்னை  அவளின் -- நிறைபொறை  நாண்உருவில் தோற்றலும் மாணுரு  மாருதி  திண்தடந்தோள் ஆற்றுவான் தொண்டு. ஆனந்த நல்விமானம்  பற்றி பசுமஞ்சள்  புனிதமோ டாடி பவனிகாண் -- ஆனந்த  சந்தோகா அன்பன்மால் பின்னும் இந்திரேசன்  தந்த வானை  மேல்ஏசல் ஏற்பு. ஆடிவரும்  தேரில்  அழகன் எமையேதான்   நாடிவரக் காணே