முகநூல் மலர்ந்த ஆசுகவி - பகுதி 4. 451 . ஸ்ரீ பார்த்த சாரதி பிரம்மோத்ஸவம் : பிரமன் விடுதூய தர்மாதி பீடம் புறப்பாடு காலை முதல்நாள் -- இரவு குழலூதும் கண்ணனுக்கு புன்னை வாகனம் தாழாதே காணலாம் மேவு. பரம பதநாதன் பாங்காய்த் தோன்றி சிரம மதுஇன்றி யாரும் -- வரமெனக் கண்டு களிப்ப அனந்தன்பால் வந்தவன்காண் மீண்டரி வாகனம் தோன்று. புதுவருடம் ''பொற்றடை'' அஃதின் தடைதீர் யதுகுல பாலன் கலுழன் -- அதன்மேல் போந்தான் விடியல்; இரவிலோ அன்ன த்தை சொந்தமாய் ஊர்ந்தான் உவந்து. வங்கத் தலைகடல் வாவென் அழைப்ப,வான் தங்கத் தகடன்ன பாலொளி -- எங்கும் பரப்பும் சிறப்புடை சூரிய சந்திரர் சேர வலம்வரும்நாள் நாலு. இறைவியின் ஏற்றம் தமதாக பார்த்தற் கிறையவன் அன்னை அவளின் -- நிறைபொறை நாண்உருவில் தோற்றலும் மாணுரு மாருதி திண்தடந்தோள் ஆற்றுவான் தொண்டு. ஆனந்த நல்விமானம் பற்றி பசுமஞ்சள் புனித...