Skip to main content

ஆசுகவி - பகுதி 4.


முகநூல் மலர்ந்த ஆசுகவி - பகுதி 4.

451. ஸ்ரீ பார்த்த சாரதி பிரம்மோத்ஸவம் :

பிரமன் விடுதூய தர்மாதி பீடம் 
புறப்பாடு காலை முதல்நாள் -- இரவு 
குழலூதும் கண்ணனுக்கு புன்னை வாகனம் 
தாழாதே காணலாம் மேவு.

பரம பதநாதன் பாங்காய்த்  தோன்றி 
சிரம மதுஇன்றி யாரும் -- வரமெனக் 
கண்டு களிப்ப அனந்தன்பால் வந்தவன்காண் 
மீண்டரி வாகனம் தோன்று.

புதுவருடம் ''பொற்றடை'' அஃதின்  தடைதீர் 
யதுகுல பாலன் கலுழன் -- அதன்மேல் 
போந்தான் விடியல்; இரவிலோ அன்னத்தை 
சொந்தமாய் ஊர்ந்தான் உவந்து.

வங்கத் தலைகடல் வாவென் அழைப்ப,வான் 
தங்கத் தகடன்ன பாலொளி -- எங்கும் 
பரப்பும் சிறப்புடை சூரிய சந்திரர் 
சேர வலம்வரும்நாள் நாலு.

இறைவியின் ஏற்றம் தமதாக பார்த்தற் 
கிறையவன் அன்னை அவளின் -- நிறைபொறை 
நாண்உருவில் தோற்றலும் மாணுரு மாருதி 
திண்தடந்தோள் ஆற்றுவான் தொண்டு.

ஆனந்த நல்விமானம் பற்றி பசுமஞ்சள் 
புனிதமோ டாடி பவனிகாண் -- ஆனந்த 
சந்தோகா அன்பன்மால் பின்னும் இந்திரேசன் 
தந்தவானை மேல்ஏசல் ஏற்பு.

ஆடிவரும் தேரில் அழகன் எமையேதான்  
நாடிவரக் காணே ! அதுவும்தான் -- வாடியே 
செய்புலன் மேலே ஒருபாட்டம் தாழாதே  
பெய்மழை போலேயாம்  மால்.

ஆயர்தம் பாடி கவர்ந்துண்ணும் கண்ணன்கை 
தூயநல் வெண்ணைபோல் என்னைஏல் -- மாயன்  
ஆடுமோர் பல்லக்கு மேவினன் மற்றவனே 
ஆடல்மா வல்லான் பெரிது.

கணையாழி காணாது கோயில் புகுதலும் 
மாணினி அன்னை கதவடைத்து -- ஆணைவழி 
கூடா திடைமறிப்ப தேடல் முனைவான்மால் 
ஆடும்நல் பல்லக் கமர்ந்து.

எட்டுநன்  நாளும் கடந்த கடைநாள் 
இட்டமான தன்தேவி மார்சூழ -- பட்டிமேய்ந்த 
பார்த்தன்தன் சாரதிக்கு நீராட்டு உற்சவம் 
நேர்த்தியாய் காணல் களிப்பு.

461. பர தத்வ நிர்ணய வைபவம் :
கண்ட பொழுது தனக்கொன்றும் கேளாது
தொண்டாய தன்நிலைபோய் ஆண்டாளை -- பெண்கொடுத்த
ஓதாவில் பல்லாண்டு ஓதி பெரியாழ்வார்
ஆதஅன் நாளைக்கொண் டாடு.

வேங்கடாத்ரி சிகராலய காளமேகம் :
விண்தொடும் வேங்கட ஏழு மலையானே!
தண்தடந் தாழ்வரை மேலுகள் -- தொண்டர்
திரளாய் தினம்தொழக் கண்டிட நின்றாய்!
வரம்தரு வேள்வி மடுத்து.
வேத வல்லி :
என்அன்னை! என்அம்மை! என்தெய்வம்! என்னென்னே
உன்னைநான் உள்மகிழ்ந்துச் சொன்னேன்போல் -- நன்று
எனைநீ உன்சிறுவன்! உன்பிள்ளை! என்ப
தனைதாயே! யாண்டும் நினை!

குணகிருத தாஸ்யம் Vs ஸ்வரூப கிருத தாஸ்யம்.
இணங்காரை தம்கரம் கொண்டு தினமே
வணங்குதல்செய் தேவாதி தேவா! -- குணம்கண்டு
தோற்றார் தமைபின் அவர்கள் இயல்பதாய்
மாற்றும் உமைப்பெறல்என் நோற்று?
சேரா சேர்த்தி சிங்கப்பிரான் :
இங்கில்லை என்றெள் ளினான்ஒல்லை வீயவே 
கல்லில்கண் தோன்றினான்! அத்தோடு -- நல்ல 
வசுரன் பிரக்லாதன் பாலித் தருள்செய் 
அசலில் அரிமுகன் கோலு.

பெரியனைப் பரவுவதே பெறாப்பேறு :
தன்னை நினையாது இன்றுதமைத் தந்தமால்
தன்னை நினைவாய் மனமேநீ! -- என்று
தெளிந்தினிது பின்னை எமக்குமன் ஞான
மளித்த மாறன் பரவு.
பகவத் ப்ரீதிகரம் புண்யம், கோபஜனகம் பாபம். :

மெய்வருத்தி மாலைத் தொழவேண்டா! அஃதன்றி 
உய்வகை உந்தமக்கு யானுரைக்கில்  -- ஐய!நீர் 
திருவல்லிக் கேணியாள் ஐவரவர் ஆன்ற 
திருவுள்ளம் கோணா தொழுகு .
திராவிடநல் தமிழ் பின்போன பெருமாள் :
வேதம் பொழுதும் முறைஓதி வாழ்வார்பொற்
பாதம் தொழஅவர் பின்நாளும் -- போத
பெருமான் திருவல்லிக் கேணியம்மான் தொண்டும்
தருவனாம் சேம உயிற்கு.
வேதப்பர மதிகம்  நமன்யே அந்யாம் :
பொதுநின்ற வேதம் தமிழ்வந்த காரணம்
ஓதில் முதல்யார்? இதுவது -- யாது?
எனபௌத்தர் முண்டர் சமணர் பலர்தேட
ஞானத் துளதிருமால் காட்டு.

உப்புச்சாற்றின் உயர் சாறு :
மறைசாற்றின் நாயகன் தேவி! உனையே
இறைப்போதும் யான்மறவேன்! தேவர் -- முறைமுறை 
பாற்கடல் ஊர அமுதன் அமுதென
நேர்பட்ட நீயே அமுது!

471. ளவந்தார் கொடை.
ஆக்கியாழ்வான் தாழ்ப்ப விடைமடுத்த நாக்கும்,அன்
நாக்கில் உமிழ்ஊர கீரைக்காய் -- மிக்கசொல்
கீதை உரைகேட்ட காதும், எதிராசர்
போதமாள வந்தார் கொடை.

காமத் காமம் முச்யதே :
வரப்புயர் தாமரை போல்தடங்கண் மாதர் 
தரமோஎன் மாதவனார் வீடு? -- கறவா
மடநாகு கன்றுக் கிரங்கல்போல் ஏகற்
கிடமாம் இறைதாள் நமக்கு.
சாரநாதன் :
வேதத்தின் உச்சி! அதனின் மிகுசாறு !
ஆதிமூல மானதேவ தேவன்!என் -- நாதன்!
சின்முத்ரா தத்வஞான போதன்!என் றிப்பஞ்ச
தன்மைசேர் பல்சுவையின் கூட்டு.
திருமணத்தூண் :
அரங்கன் திருக்கண் தரங்கம் அடித்துக் 
கிரங்க விடாதே மணத்தூண் -- இரண்டன்
சுவர்பற்றி அவ்வரங்கர் ஆன்ற அருள்தான்
எவர்பெற்றார் நாடுவரோ மற்று?
பிராஹ்மண்யம் விலைசெல்வது ஆசாரத்தே :
அந்தண ராவது மெய்யறிவு தேடலால்!
எந்தண்மைக் குமவர்கட் ஈடிலார் -- இந்த
பண்பதை இகழலார்? ஏனையோர் வாழவே
செந்தண்மை பூண்டொழுக லால்!

சிந்தயந்தி
குழலூதும் கண்ணா! உனைக்காண வேண்டி
எழலுற்று வாயில் கடப்ப -- வழியின்றித்
தாழமனம் தாளாது சிந்தயந்தி நின்னடைந்த
ஏழை மனம்எனக்குத் தா!

ஆறு வார்த்தை பெருக்கர் :
அவரோ இவர்என் மணப்பாக்க நம்பி
எவர்தேடி நாடுவார்? ஆங்கு -- அவரும்ஆம்!
என்று உரைத்த உலகா ரியன்தானே
நன்று நமக்கிறைஎன் கூறு.
இந்திரியாணி ஹயான் யாஹுஹு :
புலனைந்தும் தந்தாம் உணவு தேடி
அலையாதே உள்மனதை புத்தி -- நிலையாய்
நடத்தி உடல்மேவு ஆன்மாவின் நல்வழி
ஓட உருளட்டும் தேர்.

கிளையுடை தென்னை :
திருமங்கை மன்னன் திருப்பணி அஃதுள் 
ஒருபங்கு உண்டு அவர்தோழர் -- ஈரிருவர்க் 
கென்பேன்! திருமங்கை மன்னன் திருவரசு 
தென்னை கிளைநாலும் கண்டு. 

வரைக்கொம்பு மேலானை :
மறைஉச்சி மேலானை! வேங்கட மாமலை
வரைக்கொம்பு மாலவனை! நம்மின்-- குறையனைத்தும்
நீறுசெய் வண்கை நெடுமாலை! யான்காணு
மாறுசெய் கருத்துளே னே!

481. நாம மகிமை :
காட்டை அனல்எரித் தாலும் அவைமீள
நாட்டல் உலகியற்கை; அஃதாநம் -- மாட்டு
மறுதலைக்கும் தீவினைகள் மாய கழிவிரக்கம்
சேரவோதும் கேசவன்தன் பேர்.

யத் யத் ஆசாரதி . . .ஸ்ரேஷ்டா :
அந்தண்யத் துக்காணி வேர்சந்த்யா வந்தனம்!
எந்தண்மைக் கும்அஃ தொழுகலான்! -- முந்தயர்
வேதம் கிளையதாய் செய்கிரியை தண்தளிராய்
ஓதக்கால் வீழா மரம்.

அந்யபரத்தை ஆத்ம விநாசம் :
குடல்தொடுக்கு புத்தி தகுதி உடலம்
கொடுத்துயிர் காப்பான் பெருமை -- மடதியென
மாயன் மணந்ததன் பின்பு பிரன்நினை
வாயபயன் பேற்றில் துளை

திருகு பணம் :
தன்வினை தன்னைச் சுடும்!முற் பகல்செயின்
குன்னாது பிற்பகல் நானேயோ -- சொன்னேன்?நம்
அன்னையர் தொன்றுதொட்டு சொல்பவை தான்னன்றோ?
துன்னத் துயரம் தரும்.

எடுப்பார் கைப்பிள்ளை :
சீரார் மறைபாற் கடலைக் கடைந்ததனில்
மோரதனை நீக்கி நனிவெண்ணை -- யாரார்
எடுப்பார் அவரே அடைந்தார்அக் கண்ணன் !
எடுப்பார்கைப் பிள்ளை அவன்.

மாற்றமும் மாறாமையும் :
கலக்கிய மாமனத்தள் கைகேயி மாற
இலக்கியம் ராமகாதை ஓங்கும் -- மலங்கிய
பார்த்தன் மனம்மாறா தோர்ததால் கீதையாம்
வார்த்தைப் பயன்சேர் நமக்கு.

அன்ய சேஷத்வம் விலக்கு :
தருமம் பலவும் இருக்க நமக்கெது 
சேரும் எனத்தேறி அஃதொன்றே -- நேரும்
அதுபோல் பதிஎனமால் கைக்கொள வேட்டோம்
மதிவிகற் பால்தெய்வம் மற்று.


பெரிய திருவடி :
புள்ளுக் கிறைவா! புனிதவைன தேயா!எம்
உள்ளத் துறைமாலின் எண்ணம்போல் -- துள்ளித்
திடர்கெடத் தோன்றுவான் நீபிறந்தாய்!
உள்ளுவமுன் வேத உரு!


மதுரா மதராக்ஷரம் :
கீதை யுரைஉபாயம் நாலுளும் நம்தமக்கு
யாதும் அறிந்தாற்ற வேண்டாவே! -- பாதம்
எதிராசர் நாமம் இராமா நுசன்தன் 
மதுரமொழி நாலும் அலற்று.


ஆத்ம சமர்ப்பணம் :
தன்னதல் லாததை யான்உன்ன தாக்கினேன்!
அன்னதான என்செய்கை யும்கண்ண! -- சொன்னால்
அரசுக்காம் முத்திரை ஆக்கிய ஒன்றை
அரசிடம் சேர்த்த படி.


491. பிராட்டி புருஷகாரமானால் அல்லது கார்யம் செய்யான் :
தன்சீலை தாள்மறைப்ப தாயே!உன் பொற்பாதம்
என்பிடிப்பேன்? உன்நாதன் தன்பாதம் -- முன்காட்டி
நிற்ப அவனடிக்காய் யான்ஆளாம் முன்னமே
எற்பால் கடைக்கண்நீ காட்டு.


வாமன ஜெயந்தி :
சிறுகுறளாய் மாவடிவில் மண்ணளந்த மாயன்
பிறப்பன் குடையோடு குண்டலிகை -- வேறா
உருவில் வியன்மார்பில் முப்புரிநூல் மேன்விளங்கு
சீரான் கழலே சரண்.


பவித்ரோத்சவத்தில் பெரிய பெருமாள் பூச்சாண்டி சேவை :
பால்பரந்த மேன்வெளியில் நட்சத் திரகூட்டம் 
போலநம் மாலரங்கர் மேல்பதிந்த -- வானுலக
கோலம்தான் காணில் அயனம் அவைக்கவன்என்
றேலும் மொழிமெய்ப்பித்து.


மிதுன சேஷத்வம் :
மந்திரம் மந்திர சேடம் இரண்டும்போல்
எந்தை பிரான்தன தேவியும் -- அந்தமாய்
சேர்த்தியில் நீடுமிச் சேவைகாண் என்மனம் 
நேர்த்தியாய் நாடும் அடிக்கு.


கைமுதல் இன்மை :
வேதநூல் ஓதி மதிபடைத் தேனுமல்லேன்!
தாதநின் பாதம் கதியென்று -- ஈதுநாள்
நின்னடைந் தேனுமல்லேன்! நாகை அழகியானே! 
இன்னடைந்தேன் என்னையுனக் காக்கு.


பொதுநின்ற பொன்னங் கழல் :
மாலுக்கே மாலாய் போன மதியுடையார்
நாலிகை நாளும் நவிலும்வாய் -- போலும்
எனக்கவர வேண்டா! அரன்முரன் வாணன்
எனஅவர்வாய் ஏற்றல் பொது.


வைஷம்ய நைர்கிருண்யம் :
ஏற்ற இறக்கம் சிறுமைமேன் மையவை
ஆற்றும் அவரவர்நல் தீவினையான் -- ஏற்றும்
இறையோ பிழைப்பு?தம் இச்சை வழிசெல்
நிறையில் உயிரின் குறை.


பவித்ரோத்சவம் :
புனிதநூல் ஆடி புதுக்கணிப்பும் பூப்பொலிவும்
தான்ஐயன் தூய்மைத்தோ? மங்கலம் -- ஆனவன்தன்
மங்கலம் ஓமவேள்வி தோற்றுவார்க்கு எற்றுக்கோ? 
செங்கமலத்தாள் நின்ஆகத்தாய் சொல்லு!


அக்நி(க்குப்) பரீக்ஷை :
இரணியன் பாலனை தீயினில் பெய்ய
விரவுதீ சுட்டதில்லை! பத்தினியை -- சேராது
தீகுளிக்க ஏவ அவளைத்தீ சுட்டதில்என்?
தான்குளித்துக் காண்கச்சிக் கோன்!

500. நமோநமோ வாங் மனசாதி பூமயே : உண்ணக் கனிகள் தருவாள் ஒருத்திபின்
தின்னப் பழங்கள் தருவளாம் -- இன்னொருத்தி.
தன்னுலகம் தாஎன் றவட்குமேன் ஈந்தவக்
கண்ணனையார் எண்ணப் பெறும்?


ரக்ஷிக்கும்போது பிராட்டி சந்நிதி வேண்டும் :
செய்வினை யோபெரிது! செய்தவை இன்னமும்
எய்திலவாய் என்கூடு பூரித்து -- எய்தனன்!
ஐய! அதுகண்டு இருவராய் நின்றீரோ?
தெய்வநாய கன்தேவி யோடு!


போனகம் தருவரேல் புனிதமன்றே :
வாக்கும், செயலும், நினைவதும் மாலுக்கே
ஆக்கும் அடியார் எவராமவர் -- நோக்கொடு
சீர்த்தாள் விளக்கநீர் ஆக்கமும் போனகம்வாய்
சேர்பப் புனித முயிர்க்கு.


துலா மூலம் :
மாமுநியே இன்னமொரு நூற்றாண் டிரும்என்ற 
சேமநல் கூற்று தினமுமே -- நாமுரைக்க
ஆமது நாள்ஒன்றாய் நீட்டிக்கும் நல்குறவு
பூமாதும் மாலும் கனிந்து


அஷ்டாதச விதானம் :.
மாமுனிவன் பொன்னடிகள் எண்மரவர் வெண்குடையாய்
கோமானின் தோள்தழீஇ மாவல்லி -- மாமதில்
வீதி வலம்வரும் அவ்வனந்தன் தாமிவரும்
ஏதுண்டு சங்கை அதுக்கு?


வாய்க் கொண்டு பாடவல்ல கவியல்லேன் யான் :
துலாமூலம் தோன்றிய வள்ளர்க் கிணையே
இலாஞான தேசிகனை நாளும் -- குலாவிநங்கள்
ஏத்தினும் ஏத்தகில்லா வான்பெருமை மாமுனியை!
தோத்திரம் என்செய்வேன் யான்?


சேனை முதலியார் :
சேனா பதியாழ்வான் தேனாம் திருப்பாதம்
வானோர் பதிஉறை வார்க்கும்மற் -- றேனையோர்
தந்தமக்கும் ஆமே முதல்கதிநம் சடகோபர்
தந்ததிரு வாய்மொழிய துண்டு.


லோகாச்சார்யார் பிள்ளை :
அவரோநீர்? என்றசொல் கேட்டலும் ஆவதென்?
தேவரீர் நம்மை இரண்டாற்றின் நடுவேயாய்
மேவல் பணித்தீர் எனமணப் பாக்கத்து
தேவர் உரைப்பத் தெளிந்து.


யா வித்யா ஸா விமுக்தயே :
துறைகள் பலபல உண்டாம் அவையுள்
நெறியலா தற்றுஎன் போக்கும்? -- அறிவு
அரிய வழிபோகல் நீத்து எளிதாம்
உரிய செயல்கற்கை அஃது.


முதலாழ்வார் :
மாமயிலை அல்லிக் குளமாலை சொல்மாலை
தேமதுர ஞானத் தமிழ்கொண்டு -- நாமும்நன்
கேற்றபொய்கை பூதம்பேய் அன்னெரித்த நல்விளக்கில்
தோற்ற திருமாலைக் காண்டு.


510. விஷயாந்தர பிராவண்யம் :
விட்டிஇல் பூச்சி விளக்கில் விரும்பிவீழும்,
தேட்ட வலையுளாட் பட்டு,நம் -- மாட்டுள
ஐம்புலன் காட்டும்அம் மாயச் சுழிபட்டார்
வம்புலாம்ஈட் டத்தராய்க் கெட்டு.


உத்தவ கீதை :
அறுகால பொன்வண்டு ஆசான் நமக்கு;
விரைமலர் தேடியே தேனுண்ணும் -- மாறு
ஞானமது தேடி குருமார் பலர்பணிந்து
வானுலகு காண்பார் அவர்க்கு.


ஜங்கம தேவன் :
உள்ளம் ஒருகோயில் கண்கோ புரவாசல் 
வெள்ளவாரி வாவிமுன் வாயதா --வள்ளல் 
பிரானார்க்கு பூஉண்டு நீர்உண்டு கண்ணன்பால்
தீராக்கா தல்தலைக் கொண்டு.


ஒடக் கையரும், விட்டத்தில் இருப்பாரும் :
அந்தணர் ஆகை அனைவர்க்கு மாம்விதியே! முத்தீயோ
டந்தணல் ஓம்பலின் முன்படைத்த -- அந்தணன்
தாள்சேரக் கூம்புவார் முன்நிருத்தி மற்றையார்
ஆள்அவர்க் கென்னல் முறை.


ஒட்டா விளவின் கனி :
இராமநுசன் அண்டினார்க்கு இல்லை எனாது
பரமபதம் தான்தருவ னேலும் -- முறையில்
கனிந்துள்ளே ஒட்டறநின் றோடு கழல்விளமாய்
ஆனபின் அன்றோஆம் வீடு.


புறத்ததோடு அகத்ததாகில் அழகு:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்த தொழித்து விடில் - வழக்கதை 
மெய்ப்பித்த கூரேசர் நீட்டியும் கூட்டியும்
செய்தாரே முக்குறும்பு மாய்த்து.


நட்பு:
உதவிக்கை மாறு கரணன்கொள் நட்பு;
பதவிபெறு மாறு சுயோதனன் -- தீதுடை
நட்புமே! ஏழை குசேலன் உளங் கொளுயர் 
நட்புபிழை யாது(மில்)நீ ஆற்று.



Composed by Dasarathy Dasan,
(Agaram) Kidambi Srinivasa Rangan Srinivasa Dasan.

Comments

Popular posts from this blog

பன்னிரு நாமப் பாட்டு.

Respond to this post by replying above this line New post on  Thiruvonum's Weblog ஸ்ரீ பன்னிரு நாமம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்- by  thiruvonum   ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி - கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம - சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான் பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வான் ஏறப் போம் அளவும் வாழ்வு  ---------------------------------------------------------------------------------- இந்த திவ்ய பிரபந்தமும் பேர் அருளாளன் விஷயமே -ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களை சொல்லி பன்னிரு திருமண் காப்புகளில் அவ்வவ் வெம்பெருமான்களை ஆவாஹனம் செய்ய வேண்டும் -இந்த பிரபந்தத்தில் அவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம் - அவர்கள் அணிந்து இருக்கும் திவ்ய ஆயுதங்கள் -அவர்கள் தலைவராய் வீற்று இருக்கும் திசை - நம் சரீரத்தில் புண்ட்ர ரூபமாய் அவர்கள் வகிக்கும் பாகம் ஆகியவற்றை ஸ்ரீ தேசிகன் வெளியிட்டு...

துவாதச புண்டரம் :

துவாதச புண்டரம் : [ஶ்ரீசூர்ணம் (தாயார்) - திருமண் (பெருமாள்) - ஸ்தாநம் - நிறம்] கேசவன்  தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற  சக்கரம்  ! நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் -- வேள்வித்தீ  பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !  அன்னை சிரிதேவி யாம்! நாரணன்  சங்கு தங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்  மங்கலத் தாளினன்! தேவியும் -- பொங்கலைவாய்  தோன்றினாள்!  வா ன்நீல வண்ண த்தெம் அண்ணல்மால் ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு ! மாதவன்  கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில் பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் -- பொருந்தும்   அமலன்அங் கைமா தவன்தன் தேவி  கமலை யும் சேரிடம் மார்பு ! கோவிந்தன்  குளிர்முத்தின் வெண்ணிற மும்  கோலவில்  நான்கும்  மிளி ர்முன் கழுத்தின் அமர்ந்து -- அளிபொறை  அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !  முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து.  விஷ்ணு  தாமரைத் தாதன்ன பொன்னிற த் தோள்கள்  சுமக்கும்  கலப்பை ஓர் ந...