Skip to main content

துவாதச புண்டரம் :


துவாதச புண்டரம் :
[ஶ்ரீசூர்ணம் (தாயார்) - திருமண் (பெருமாள்) - ஸ்தாநம் - நிறம்]


கேசவன் 

தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற சக்கரம் !
நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் -- வேள்வித்தீ 
பொன்னன்! அடியார் திருநெற்றிக் கேசவன் ! 
அன்னை சிரிதேவி யாம்!

நாரணன் 

சங்குதங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர் 
மங்கலத் தாளினன்! தேவியும் -- பொங்கலைவாய் 
தோன்றினாள்! வான்நீல வண்ணத்தெம் அண்ணல்மால்
ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு!

மாதவன் 

கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில்
பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் -- பொருந்தும்  
அமலன்அங் கைமா தவன்தன் தேவி 
கமலையும் சேரிடம் மார்பு!

கோவிந்தன் 

குளிர்முத்தின் வெண்ணிறமும் கோலவில் நான்கும் 
மிளிர்முன் கழுத்தின் அமர்ந்து -- அளிபொறை 
அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள்
முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து. 

விஷ்ணு 

தாமரைத் தாதன்ன பொன்னிறத் தோள்கள் 
சுமக்கும் கலப்பைஓர் நான்கும் -- நமக்கு 
வயிற்றின் வலப்புரம்சேர் விட்டுவவன் மாது 
துயக்கறுக்கும் தோன்றக் கிடந்து.

மதுசூதனன் 

உலக்கை ஒருநான்கும் தாமரையின் மென்நிறமும் 
மாலாய் உலகாளும் மாயோன் -- வலப்புயது 
செவ்விக்கு செவ்விசேர் வைட்டணவி மாதொடும் 
தவ்வை அவள்வௌவல் மாய்த்து. 

திரிவிக்ரமன் 

அனலோன் அணிநிறமும் கைசுரிகை நான்கும் 
தனதாகி, வேட்டும் வரம்ஈட்டும் -- கோனவன்தோள்   
மாட்டுயர்  வஞ்சிக் கொடியென் ஏறினாளைத்   
தீட்டும் கழுத்தின் வலத்து .

வாமனன் 

அருக்கன் அழல்நிறமும் கைநான்கு தாங்கு 
உருப்பொலிந்த வஜ்ரமும் எம்மின் - பெருவுதரம் 
சேர்இடபால் ஆங்கு அரியவன் தேவியும் 
பேர்ந்திடாது மேவும் மகிழ்ந்து.

ஸ்ரீதரன் 

வெண்டா மரைமென் நிறமும் பட்டயமும் 
கொண்டானை  கைநின்ற சார்ங்கம்சேர் --  தண்டா 
மரைதா யவளும் திகழுமிடம் நம்தோள்
மறைநூல் இடது புரம்.

ஹிருஷீகேசன்

மின்னின் நிறவண்ணன் மற்கரம் கைபூண்டு
மன்னுபுகழ் மால்தேவ தேவிசேர் -- மன்னன்
திகழ்விடம் நம்மின் கழுத்திட மாக;
புகழது எந்தை குடிக்கு.

பத்மநாபன் 

பகலவன் பொன்நிறமும் தன்பெரும் தேவி 
அகல்மார்வத் தோடும் அவன்கை -- திகழ்வதாம் 
ஐம்படை சேரத் துலங்குவான் பின்முதுகு 
தம்மிடமாய் போற்றும் வகைத்து .

தாமோதரன் 

உதயபானு போல்நிறமும் காணுலுகில் பேரழகி 
யாத மலர்மகள் மங்கல -- நாதனும் 
பாசம்கை   பற்றி  இசைவிடம் பின்கழுத்து,
வாசன்வாய் பேசும் புகழ்ந்து.

--தாசராதி தாஸன் 
(அகரம் ) கிடாம்பி ஸ்ரீநிவாஸ ரங்கன் ஸ்ரீநிவாஸ தாஸன்.




Comments

Popular posts from this blog

ஆசுகவி - பகுதி 4.

முகநூல் மலர்ந்த ஆசுகவி - பகுதி 4. 451 . ஸ்ரீ பார்த்த சாரதி பிரம்மோத்ஸவம் : பிரமன் விடுதூய  தர்மாதி பீடம்  புறப்பாடு காலை முதல்நாள் -- இரவு  குழலூதும் கண்ணனுக்கு  புன்னை வாகனம்  தாழாதே காணலாம் மேவு. பரம பதநாதன் பாங்காய்த்  தோன்றி  சிரம மதுஇன்றி யாரும் -- வரமெனக்  கண்டு களிப்ப  அனந்தன்பால்  வந்தவன்காண்  மீண்டரி வாகனம்  தோன்று. புதுவருடம் ''பொற்றடை'' அஃதின்  தடைதீர்  யதுகுல பாலன்  கலுழன்  -- அதன்மேல்  போந்தான் விடியல்; இரவிலோ  அன்ன த்தை  சொந்தமாய் ஊர்ந்தான் உவந்து. வங்கத் தலைகடல் வாவென் அழைப்ப,வான்  தங்கத் தகடன்ன பாலொளி -- எங்கும்  பரப்பும் சிறப்புடை  சூரிய சந்திரர்   சேர வலம்வரும்நாள் நாலு. இறைவியின் ஏற்றம் தமதாக பார்த்தற்  கிறையவன்  அன்னை  அவளின் -- நிறைபொறை  நாண்உருவில் தோற்றலும் மாணுரு  மாருதி  திண்தடந்தோள் ஆற்றுவான் தொண்டு. ஆனந்த நல்விமானம்  பற்றி பசுமஞ்சள்  புனித...

பன்னிரு நாமப் பாட்டு.

Respond to this post by replying above this line New post on  Thiruvonum's Weblog ஸ்ரீ பன்னிரு நாமம் -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்- by  thiruvonum   ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவி தார்க்கிக கேசரீ வேதாந்தா சார்ய வர்யோ மே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி - கவி தார்க்கிக சிம்ஹாய கல்யாண குண சாலினே ஸ்ரீ மதே வேங்கடேசாய வேதாந்த குரவே நம - சீர் ஓன்று தூப்புல் திரு வேங்கடமுடையான் பார் ஒன்றச் சொன்ன பழ மொழியுள் ஓர் ஓன்று தானே யமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வான் ஏறப் போம் அளவும் வாழ்வு  ---------------------------------------------------------------------------------- இந்த திவ்ய பிரபந்தமும் பேர் அருளாளன் விஷயமே -ஸ்ரீ கேசவாதி திரு நாமங்களை சொல்லி பன்னிரு திருமண் காப்புகளில் அவ்வவ் வெம்பெருமான்களை ஆவாஹனம் செய்ய வேண்டும் -இந்த பிரபந்தத்தில் அவ்வெம்பெருமான்களின் திருமேனி நிறம் - அவர்கள் அணிந்து இருக்கும் திவ்ய ஆயுதங்கள் -அவர்கள் தலைவராய் வீற்று இருக்கும் திசை - நம் சரீரத்தில் புண்ட்ர ரூபமாய் அவர்கள் வகிக்கும் பாகம் ஆகியவற்றை ஸ்ரீ தேசிகன் வெளியிட்டு...